ஆலயத்தின் வரலாறு மற்றும் சிறப்புகள்
ஆலயத்தின் வரலாறு
சுகமுனிவர் என்ற ரிஷி இந்த ஊர் வழியாக சென்றபோது எதிர்பாராமல் அவரை ஒரு நாகம் தீண்டிவே அவர் இச்சிவாலயத்திற்கு வந்து தவம் புரிந்து அக்கொடியவிஷம் முறிக்கப்பெற்று சிவனருள் பெற்ற திருத்தலம். இன்றும் மூலவ திருமூர்த்திகளின் மீது சர்பங்கள் ஸ்பரிசத்தை காணமுடிகிறது.
மூன்றாம் பார்த்திவேந்திரவர்மன் என்ற மன்னனால் நிலம் வழங்கப்பட்டு, அதில் ஈசனுக்கு நந்தவனம் அமைத்து வழிபாடு செய்து சிவனருளால் அனைத்து நலன்களையும் பெற்ற திருத்தலம் என்ற தகவல் இவ்வாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
மேலும், இவ்விரு கல்வெட்டுகளில் தர்மத்தை காப்பவர்களின் பாதத்தை தன் தலைமேல் வைத்து போற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு
ஆலய வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டு குறிப்புகள்
இவ்வாலயத்தில் கிடைத்த பதிகம்
“மலர்பொழிலார் சேயாற்றின் வடபால் மன்னும்
மறை யோத்தூர்த் திருத்த்தலத்தின் வடகீழ் பாங்கர்
நிலைப்பதியாம் மடுமாநகர் நிறையும் அண்ணல்
நீல்கணத் தவமுனிவன் சுகந்தான் கொண்ட
கொடைவிடத்தை யகற்றி யருள்கொடுத்த வள்ளல்
கோமகளாம் பாலகுசத்தம்மை பங்கர்
கலைஞானம் வழங்குதிரு பவானி யீசர்
கழல் பணிவார் நலம்பலவும் பெறுவர் நன்றே!”
இச்சிவாலயதிற்கு வந்து வழிபடும் பக்தர்கள், ஆலயத்தின் வழிபாடு, உழவாரப்பணி மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு உதவும் அனைவருக்கும் சிவனருளால் உடல் உபாதைகள், நரம்பு, மூளை சார்ந்த பிணிகள் நீங்கி, மனநிம்மதி மற்றும் அனைத்து நலன்களையும் பெற்று வளமுடன் வாழவர் என்பது இந்த பதிகம் மேலும் உறுதிப்படுத்துகிறது.