ருத்ர பவானீஸ்வரர் ஆலய புனரமைப்புத் திருப்பணிகள்
அதீத சக்திவாய்ந்த இந்த தொன்மையான சிவாலயத்தின் புனரமைப்பு திருப்பணியில் நீங்களும் மன்னன் பார்த்திவேந்திரவர்மன் போல நிதி மற்றும் பொருள் அளித்து சிவ கைங்கர்யம் செய்து சிவனருளால் அனைத்து நலன்களுடன், பேர்புகழ்பெற்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நோயின்றி நீடுடி வாழ்க!!
சிவார்ப்பணம்!!!
கைலாசநாதர் கற்கோயில் அமைக்கும் திருப்பணி
ஆலயத்தின் வடகிழக்குப்பகுதியில் அமைந்துள்ள செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட கைலாசநாதர் ஆலயம் சிதிலமடைந்து பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத நிலையில் உள்ளதால் அதனை புனரமைப்பு செய்து கற்கோயில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.
இதர புனரமைப்புத் திருப்பணிகள்:
ஆலயத்தின் நுழைவு வாசல் தொடங்கி, விமானம், மேற்கூரை, நவக்கிரக மண்டபம், சுதைசிற்பங்கள், சுற்றுசுவர் வரை அனைத்தும் சிதிலமடைந் நிலையில் உள்ளதால் அனைத்தையும் புனரமைப்பு செய்து, தனிச்சன்னிதிகள், மண்டபங்கள், மறுகட்டுமானம் மற்றும் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெறவுள்ளன.